November 25, 2019

அம்சங்கள்

சிக்கனமாய் நீ சிரிப்ப
சிறு முத்தம்தான் கொடுப்ப
உன் கண்ணயரும் வேளையிலும்
என் கைபட்டா கதறிடுவ

மார்போடு உனைசாய்க்க
மணிக்கணக்கில் ஏங்க வைப்ப

கொஞ்சித்தவழ்ந்தோடுவ
கொஞ்சமாய் நடை போடுவ
சின்னதாய் தள்ளாடுவ
சில சமயம் தரைமோதுவ

மண்டியிட்டு நான் தூக்க
மல்லாக்காய் நீ குதிப்ப
ஏக்கத்தில் நான் தவிக்க
ஏகாந்தமாய் நீ சிரிப்ப

தொட்டுவிடா தூரத்தில் தள்ளி நிற்ப
ஓரக்கண் உயர்த்தி புன்னைகைப்ப

பிடிவாதம் தவறுன்னு புருஞ்சிருப்ப
தவறாம அதனால தவிக்கவைப்ப

இம்சைகள் இல்லையடி - இவை 
உன் அம்சங்கள் நானறிவேன்

பரிசொன்னு வேணும்மான்னா
உன் ஸ்பரிசம் தவிர்த்து என்னகேட்பேன்..

                                                             - அப்பா