December 20, 2008

நீ வேண்டும்

அன்பே புறம் கண்டேன்
அகம் தந்தேன் என்றென்னி புறக்கனிக்காதே - உன்
அகம் அறிந்தே வரம் கேட்கிறேன்
அதனில் ஓர் இடம்...

நம் இரு ஜோடி கண்களால்
ஒரு கோடி வார்த்தைகள்
ஓசை இன்றி - ஓர் பாஷை ஒன்றில்
கவிதையாய் பேச
என் காதலியாய் நீ வேண்டும்...

கொஞ்சமாய் சண்டையிட
கொஞ்சலால் அதனைவிட
என் தாரமாக - நீ வேண்டும்
என் அவதாரம் விளக்க - நீ வேண்டும்...
எனவே வேண்டுகின்றேன் கடவுளை
எனக்கே நீ வேண்டுமென்று...


December 19, 2008

மீண்டும் ஓர் ஜனனம்

எண்ணம் தான் உன்னிடம் ஒரு கை
அன்னம் வாங்கி உண்ண...
என்ன செய்ய
வேலைக்காக விலகியுள்ளேன்
உன் பார்வையிலிருந்து மட்டும்
உன் பாசத்திலிருந்து அல்ல ...

அவ்வப்போது
தொலைபேசியால் தொலைவை மறந்தாலும்
துண்டிக்கும் முன், துடிக்கும் என் இதயத்திற்கு
உன் இதழ்கள் சொல்லும் ஓர் ஆதரவு
"நாளை பேசுவோம்" என்ற வார்த்தைதான்...

ஆறுதலாக ஆயிரம் இருந்தாலும்
அம்மா உன் மடியில் அரைநொடி நேரம்
கிடைக்காமல் ஆறுதல் எங்கே...

வீட்டில் உன் நிழலாய் நான் இருந்தேன் - இங்கே
உன் நினைவோடு நானிருக்கின்றேன்...

சில சமயங்களில்
என் கண்ணீர் கருவிழி தாண்டும் போது
கடவுளை கேட்கிறேன் - உன் கருவினில்
மீண்டும் ஓர் ஜனனம்...

உனது குமார்...

December 16, 2008

பணத்தை (பறி) கொடுத்தேன்

முடிதிருத்தம் செய்துகொள்ள முழுவதும் குளிரூட்டப்பட்ட ஒரு கடைக்கு சென்றேன்.கடையின் உள்ளே சென்றதும் சின்னதாய் ஒரு நடுக்கம் குளிரால் அல்ல பணம் எவ்வளவு தேவைப்படுமோ என்ற பதற்றம் தான் அதற்கு காரணம். "கொஞ்சம் ஓவராதான் போரமோ,போவம் என்ன பண்ணிடுவாங்க" என நினைதுக்கொண்டேன். காக்க காக்க கட்டிங் உங்களுக்கு கச்சிதமா இருக்கும் சார் என ஆரம்பித்தார் அங்கு இருந்த ஒரு பார்பர்."என்ன வச்சு எதும் காமடி கீமடி பண்ணலயே"என சிரித்து கொண்டேன். கட்டிங் ஆரம்பமானது. பேஸியல் பண்ணிகோங்க அஜித்துக்கு அடுத்து நீங்க தான்" என பல பிரைன் வாஷுடன் முடிதிருத்தம் முடியும்தருவாயை அடைந்தது."நீ என்ன பிரைன் வாஷ் பண்ணுனாலும் நான் ஒரு பேஸ் வாஷ் கூட இங்க பண்ணிக்கமாட்டேன்டி" என்ற முடிவுடன் நான். என் அருகே இருந்த சக வாடிகையாளர்களுக்கும் பேசியல்,ஹேர் கலரிங் என பல நடந்ததுது.அதில் இருவருக்கு தலையில் கருப்புநிற சட்டியை கவில்துருந்தனர் ஆர்வம் மிகவே அது தலையில் இருக்கும் பித்தநீரை பிரித்தெடுக்கும் Steaming முறை என்பதையும் ஆயில் மசாஜ் செய்துகொண்டால் Steaming இலவசம் என்பதையும் அறிந்துக்கொண்டேன். "எவ்வளவோ பார்த்தாச்சு இது என்ன" என நினைத்துக்கொண்டு ஆயில் மசாஜிக்கு ஆமோதித்தேன்."இன்னம்மா நம்பல இந்த ஊர் நம்புது " என்ற சந்தோசத்துடன் என் தலையில் எண்ணயை தேய்த்து மிர்தங்கம் வாசித்துவிட்டான்."என்னா அடி" என நினைக்கயில் சிறிது ஓய்வு கொடுத்தான்.("உண்மையில் என்னை அடித்த களைப்பில் ஓய்வு எடுத்தான்"). பின் எனக்கும் Steaming முடிந்தது .ஹேர் வாஷிங் & டிரயிங்கும் முடிந்தது. கட்டணத்தை செலுத்த கடைக் கல்லாவின் அருகே சென்றேன், யு ஆர் லூகிங் ஸ்மார்ட் சார் என சொல்லிவிட்டு 500 rupee சார் என்றான். பணத்தை (பறி) கொடுத்துவிட்டு நகர்ந்தேன். சென்னையில் உள்ள அனைத்து கடைகளும் இப்படிதான் என்பது என் கருத்தல்ல. எனது தனிப்பட்ட அனுபவத்தை நகைச்சுவையாய் உங்களிடம் பகிர்ந்து கொள்ளவே இப்பதிவை பதிந்துள்ளேன்.

என்னவளே

கவிதைகளே கவிதை கேட்க காத்திருக்கும்
அவற்றை உன் உதடுகளால் உச்சரிக்கையில்
உன் காந்தக்கண்களே என்னை கவருகையில்
அதில் மையிட்டு ஏனோ மையல் கொள்ளச்செய்கிறாய்...,

பெண்ணின் கண்கள் கவிபாடும் என்று
பல கவிதைகளில் கண்டுள்ளேன்
ஆனால் உண்மையில் கண்டுகொண்டேன்
தினமும் நான் படிக்க துடிக்கும்
உலகின் சிறந்த கவிதை உன் கண்கள் என்று...,

மண்ணில் நான் இருப்பதற்கு
புவி ஈர்ப்பு விசை காரணமாம்
உன் விழி ஈர்ப்பைப் பற்றி தெரியாத
ஒரு விஞ்ஞானியின் கருத்து...,

உன் இளமை இமைகள்
உன் கண்ணை கட்டி அணைக்கையில்
ஏதோ என்னை உன் அருகே அழைப்பது போல்
ஓர் பிரம்மை...,

உன் வாசமே என் சுவாசமாக வேண்டும்
என் வசம் வாரயோ - என்று
பிரம்மனே உன்னிடம் பிச்சை எடுக்கயில்
உன் புருவத்தினிடையே பொட்டிட்டு
உன் பருவத்தினை பருக போகும் நான் பாக்கியசாலி தானே!!!

இதுவரையிலும்
கவிஞன் எனக்கு கிடைக்காத வரம்
என் கவிதை காகிதத்திற்கு
உன் விரல்களிடையே விளையாட...,

அன்பே
உன் அழகை தமிழ் வார்த்தைகளால் அலங்கரித்தேன்
உண்மையில் அழகு பெற்றது
என் வார்த்தைகள் தான் - நன்றி ...

December 08, 2008

காதல்தான்

மல்லிகை மணத்துடன்
புன்னகை முகத்துடன்
அமைதியான ஆராவாரத்துடன்
அழகாய் அமர்ந்திருக்கின்றாய்

பாவையே
வகுப்பறையில் மட்டும்மல்ல
என் மனதறையுலும்தான்....

என் புருவம் உயர்த்தி
உன் உருவம் காணத்துடிப்பது
என் பருவமானாலும்....

இமைகளை மூடி
இதயத்தை திறந்தால்
எனக்கு தெரிவது
உன் இளமை மட்டுமல்ல
இதயமும்தான்....

December 06, 2008

தோல்வி

பூவில் தேன்தேடும் தேனீ முயற்சிக்கிறது

பெண் பூவே

உன் இதழைவிட இனிப்பான ஓர் தேன்கூட்டை கட்டிவிட

பாவம் !!!

தவம்

தங்கங்கள் எல்லாம் தவம்கிடகின்றன என்னவளின் அங்கங்களால் அழகுபெற...

நன்றி:வடிவமைப்பு முதல் வார்த்தை தெளிவுவரை என்னை வழிநடத்திய சுரேஷ்க்கு நன்றி.