May 15, 2009

யார் அவள் ??

என் மார்போடு ஓடிக்கொண்டு
மணிக்கணக்கில் உறங்கிக்கிடப்பாள் ...
சில நேரத்தில்
செல்லமாய் சினுங்கிக்கொண்டு
பிரகாசமாய் கண்திறப்பாள் ...
ஆவலுடன் அவளை எடுத்து
கைகளால் கட்டியணைத்து
நான் முத்தமிட
அவள் என் காதுகடிப்பாள் ...
என் தனிமையை இனிமைபடுதியவள் அவள் ...
இன்னிசை பாடியபடி இரவில்
என்னை உறங்கவைபவள் அவள் ...
அவளை எல்லோரும் செல்லமாய்
'CELL PHONE' என்பார்கள் ... நானும்தான்...

நீ ஒரு கவிதை

அன்பே ...
நான் என் கற்பனையில் கவி எழுதவில்லை
உன்னை கண்டபின் தான் கவி எழுதுகின்றேன் ...

எத்தனை கவிதையடி உன்னில்
உன்னை "பார்த்து பார்த்து " நான் எழுதிய
ஒவ்வொரு வார்த்தையும் கவிதையாகிறது என்றால் ...
நீ ஒரு கவிதைதானே !!!

இப்படிக்கு,
கவிஞன் என்பதால் இக்கவிதைக்கு நான் சொந்தக்காரன்
அப்படியென்றால் உனக்கு ???

May 12, 2009

என் சுவாசக்காற்றே

உனைக் கடந்து வரும் காற்று மட்டுமே
என் சுவாசக்காற்றாக வேண்டும் ...
உனைத் தழுவி வரும் என் வார்த்தைகள் மட்டும்
கவிதையாவது போல் ...
இப்படிக்கு,
உன் வாசத்தை மட்டுமே சுவாசமாக பெற துடிக்கும் ஓர் இதயம் ...

January 23, 2009

நட்பில் உயிர்பெறுகிறது

நட்பெனும் செடிதனில் - நாம்
இலைகளாய் இணையும் போதெல்லாம்
நம்மில்
சிரிப்பு எனும் பூ உயிர்பெறுகிறது...

பெற்றோரிடமும் உற்ராரிடமும்
ஊமையாகும் பல வார்த்தைகள்
நம் நட்பில் உயிர்பெறுகிறது...

கல்லூரி காலம் முடிந்து
கரம் பிரிகின்றோம் நம் கடமைகளுக்காக
இதயத்தால் ஒன்றுபட்டு
இடத்தால் வேறுபட்டு இருக்கும்போது
நம் நிகழ்வுகளையும் , நினைவுகளையும் பகிரிந்துகொள்ள
கடவுள் நம்மை கண் காட்டினால்
அன்று கைகுலுக்கி கொள்வோம்
நம் கதை பேசி கொள்வோம்...

நண்பா
நீ பார்வை மறைந்தாலும்
பாதை பிரிந்தாலும்
நம் நட்பு என்றும் உயிர்த்திருக்கும்...

என்றும் நட்புடன்,

சாந்தகுமார்