November 25, 2019

அம்சங்கள்

சிக்கனமாய் நீ சிரிப்ப
சிறு முத்தம்தான் கொடுப்ப
உன் கண்ணயரும் வேளையிலும்
என் கைபட்டா கதறிடுவ

மார்போடு உனைசாய்க்க
மணிக்கணக்கில் ஏங்க வைப்ப

கொஞ்சித்தவழ்ந்தோடுவ
கொஞ்சமாய் நடை போடுவ
சின்னதாய் தள்ளாடுவ
சில சமயம் தரைமோதுவ

மண்டியிட்டு நான் தூக்க
மல்லாக்காய் நீ குதிப்ப
ஏக்கத்தில் நான் தவிக்க
ஏகாந்தமாய் நீ சிரிப்ப

தொட்டுவிடா தூரத்தில் தள்ளி நிற்ப
ஓரக்கண் உயர்த்தி புன்னைகைப்ப

பிடிவாதம் தவறுன்னு புருஞ்சிருப்ப
தவறாம அதனால தவிக்கவைப்ப

இம்சைகள் இல்லையடி - இவை 
உன் அம்சங்கள் நானறிவேன்

பரிசொன்னு வேணும்மான்னா
உன் ஸ்பரிசம் தவிர்த்து என்னகேட்பேன்..

                                                             - அப்பா 

April 04, 2019

(மை)யல்

மையிட்ட கண்கள் கண்டேன்
மையல் கொண்டேன்...

கார்மேகம் கண்டு தோகை விரித்தாடும் மயில் கூட
உன் மோகம் கொண்டு நான் வருகையில்
உன் கருவிழி சிறு நடனம் முன் தோற்றோடுகிறது..


உன் கண் பேசும் கவிதைக்கு
உன் கால் கொலுசு இசை இருக்கு..
இசைஞானி இங்கு எதற்கு
உன் கால் கொலுசிசை போதுமே எனக்கு..

ஒருமையிலே நீ இருக்க
பொருமைதனை நான் இலக்க
பன்மையிலே பார் மறப்போம்
என் பெண் மயிலே வா பறப்போம்...




October 16, 2017

உன் செவிமடல் வருடி கவிபாடி - பின் 
உன் பளிங்கு கன்னத்தில் விழுந்தோடி 
உன் தேனிதழ் தேடிவரும் 
உன் கருங்கூந்தல் மேல் 
செல்லக்கோபம்போல் உன் கைகளுக்கு - எனவே தான்  
நுனிவிரல் கொண்டு அதன் இடம் சேர்க்கின்றது.
சப்தமின்றி நித்தமும் நிகழும் நிகழ்விது.. 

November 21, 2016

கர்ப்பம்


உன்னுள் உருளும் நம் கண்மணியால்
உன் உடல் சோர்ந்தாலும் தூக்கம் துலைந்தாலும்
உன் ஏக்கம் என்னவோ அதன் அடுத்த அசைவிற்காக மட்டுமே
உறவே இந்த உறவே நம் உலகில் புனிதம்..

உதைபடுவதும், உதைபடுவதை உன்னவனிடம் முறையிடுவதும்
உயிரின் உணர்வை உணரும் தருணம்
உணர்வே அந்த உணர்வே உணர்வில் புனிதம்..
 
.... 



March 22, 2010

என் உலகம்(என்னவள்)

விடியும் என்பது விதிதான் என்றாலும்
உன் மடியில் படர்ந்து மதி முகம் பார்த்திருக்கையில்
எப்படி ஏர்க முடியும் கதிரவன் கண்விழித்ததை!!!

உன் கருங்கூந்தல் என் இருள் வானமாய்
உன் மலர் முகம் அதன் மதியாய்
நான் மட்டும் ரசிக்கும் என் விண்ணுலகம்(தேவதை) நீ...

என்னை விட்டு நகர்ந்து செல்லாதே
என் உலகை நரகமாகாதே ...

உன்னவன் ,
குமார்

May 15, 2009

யார் அவள் ??

என் மார்போடு ஓடிக்கொண்டு
மணிக்கணக்கில் உறங்கிக்கிடப்பாள் ...
சில நேரத்தில்
செல்லமாய் சினுங்கிக்கொண்டு
பிரகாசமாய் கண்திறப்பாள் ...
ஆவலுடன் அவளை எடுத்து
கைகளால் கட்டியணைத்து
நான் முத்தமிட
அவள் என் காதுகடிப்பாள் ...
என் தனிமையை இனிமைபடுதியவள் அவள் ...
இன்னிசை பாடியபடி இரவில்
என்னை உறங்கவைபவள் அவள் ...
அவளை எல்லோரும் செல்லமாய்
'CELL PHONE' என்பார்கள் ... நானும்தான்...

நீ ஒரு கவிதை

அன்பே ...
நான் என் கற்பனையில் கவி எழுதவில்லை
உன்னை கண்டபின் தான் கவி எழுதுகின்றேன் ...

எத்தனை கவிதையடி உன்னில்
உன்னை "பார்த்து பார்த்து " நான் எழுதிய
ஒவ்வொரு வார்த்தையும் கவிதையாகிறது என்றால் ...
நீ ஒரு கவிதைதானே !!!

இப்படிக்கு,
கவிஞன் என்பதால் இக்கவிதைக்கு நான் சொந்தக்காரன்
அப்படியென்றால் உனக்கு ???