அன்பே புறம் கண்டேன்
அகம் தந்தேன் என்றென்னி புறக்கனிக்காதே - உன்
அகம் அறிந்தே வரம் கேட்கிறேன்
அதனில் ஓர் இடம்...
நம் இரு ஜோடி கண்களால்
ஒரு கோடி வார்த்தைகள்
ஓசை இன்றி - ஓர் பாஷை ஒன்றில்
கவிதையாய் பேச
என் காதலியாய் நீ வேண்டும்...
கொஞ்சமாய் சண்டையிட
கொஞ்சலால் அதனைவிட
என் தாரமாக - நீ வேண்டும்
என் அவதாரம் விளக்க - நீ வேண்டும்...
எனவே வேண்டுகின்றேன் கடவுளை
எனக்கே நீ வேண்டுமென்று...
கவிதை தளம், இது என் கற்பனை களம்... காகிதத்தில் கவிஎழுதி சில கண்களை(மட்டும்) அது தழுவி காற்றோடு காணாமல் போன கதை நேர்றோடு முடியட்டும் என என் இதயத்தை இணைத்துள்ளேன் இணையத்தளத்தில்.
December 20, 2008
நீ வேண்டும்
December 19, 2008
மீண்டும் ஓர் ஜனனம்
எண்ணம் தான் உன்னிடம் ஒரு கைஅன்னம் வாங்கி உண்ண...
என்ன செய்ய
வேலைக்காக விலகியுள்ளேன்
உன் பார்வையிலிருந்து மட்டும்
உன் பாசத்திலிருந்து அல்ல ...
அவ்வப்போது
தொலைபேசியால் தொலைவை மறந்தாலும்
துண்டிக்கும் முன், துடிக்கும் என் இதயத்திற்கு
உன் இதழ்கள் சொல்லும் ஓர் ஆதரவு
"நாளை பேசுவோம்" என்ற வார்த்தைதான்...
ஆறுதலாக ஆயிரம் இருந்தாலும்
அம்மா உன் மடியில் அரைநொடி நேரம்
கிடைக்காமல் ஆறுதல் எங்கே...
வீட்டில் உன் நிழலாய் நான் இருந்தேன் - இங்கே
உன் நினைவோடு நானிருக்கின்றேன்...
சில சமயங்களில்
என் கண்ணீர் கருவிழி தாண்டும் போது
கடவுளை கேட்கிறேன் - உன் கருவினில்
மீண்டும் ஓர் ஜனனம்...
உனது குமார்...
December 16, 2008
என்னவளே
கவிதைகளே கவிதை கேட்க காத்திருக்கும் அவற்றை உன் உதடுகளால் உச்சரிக்கையில்
உன் காந்தக்கண்களே என்னை கவருகையில்
அதில் மையிட்டு ஏனோ மையல் கொள்ளச்செய்கிறாய்...,
பெண்ணின் கண்கள் கவிபாடும் என்று
பல கவிதைகளில் கண்டுள்ளேன்
ஆனால் உண்மையில் கண்டுகொண்டேன்
தினமும் நான் படிக்க துடிக்கும்
உலகின் சிறந்த கவிதை உன் கண்கள் என்று...,
மண்ணில் நான் இருப்பதற்கு
புவி ஈர்ப்பு விசை காரணமாம்
உன் விழி ஈர்ப்பைப் பற்றி தெரியாத
ஒரு விஞ்ஞானியின் கருத்து...,
உன் இளமை இமைகள்
உன் கண்ணை கட்டி அணைக்கையில்
ஏதோ என்னை உன் அருகே அழைப்பது போல்
ஓர் பிரம்மை...,
உன் வாசமே என் சுவாசமாக வேண்டும்
என் வசம் வாரயோ - என்று
பிரம்மனே உன்னிடம் பிச்சை எடுக்கயில்
உன் புருவத்தினிடையே பொட்டிட்டு
உன் பருவத்தினை பருக போகும் நான் பாக்கியசாலி தானே!!!
இதுவரையிலும்
கவிஞன் எனக்கு கிடைக்காத வரம்
என் கவிதை காகிதத்திற்கு
உன் விரல்களிடையே விளையாட...,
அன்பே
உன் அழகை தமிழ் வார்த்தைகளால் அலங்கரித்தேன்
உண்மையில் அழகு பெற்றது
என் வார்த்தைகள் தான் - நன்றி ...
Subscribe to:
Posts (Atom)